உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குன்றத்து கோயிலில் மே 13 வசந்த உற்ஸவம் துவக்கம்

குன்றத்து கோயிலில் மே 13 வசந்த உற்ஸவம் துவக்கம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வசந்த உற்ஸவம் மே 13ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டுடன் துவங்குகிறது.அன்று உற்ஸவர் சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை முடித்து காப்பு கட்டப்படும். இரவு 7:00 மணிக்கு வசந்த மண்டபம் மையப்பகுதியில் தண்ணீர் நிரப்பப்பட்டு ஊஞ்சலில் சுவாமி, தெய்வானை எழுந்தருளுவர். அங்கு 30 நிமிடங்கள் வசந்த உற்ஸவம் நடைபெறும். இந்நிகழ்ச்சி மே 21 வரை நடக்கும்.விசாக பால்குட திருவிழாவை முன்னிட்டு மே 22 அதிகாலை 5:00 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து காலை 7:00 மணிக்கு விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவர். பக்தர்கள் எடுத்து வரும் பால்குடங்களில் இருந்து சுவாமிக்கு மதியம் 2:00 மணி வரை பால் அபிஷேகம் செய்யப்படும்.மே 23 காலை உற்ஸவர் சுவாமி, தெய்வானை தங்கக்குதிரை வாகனத்தில் தியாகராஜர் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள மொட்டையரசில் எழுந்தருளுவர். அங்கு மொட்டையரசு திருவிழா முடிந்து, இரவு பூப்பல்லக்கில் கோயிலுக்கு திரும்புவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை