உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் ராணுவ வீரர்களுக்கு வரவேற்பு

மதுரையில் ராணுவ வீரர்களுக்கு வரவேற்பு

மதுரை: கார்கில் தினத்தை நினைவு தினத்தை முன்னிட்டு மரியாதை செலுத்தும் வகையில் தனுஷ்கோடியில் இருந்து பைக் மூலம் புறப்பட்ட ராணுவ வீரர்களுக்கு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் பூங்கொத்து கொடுத்து போலீஸ் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.ஆண்டுதோறும் ஜூலை 26ல் கார்கில் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களை போற்றும் வகையிலும், போர் வெற்றியை நினைவூட்டும் வகையிலும் கார்கில் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டு 25 வது ஆண்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாட்டிற்காக உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பல்வேறு எல்லை பகுதிகளில் இருந்தும் பைக் மூலம் ராணுவ வீரர்கள் பயணம் மேற்கொண்டு டில்லியில் ஒன்று கூடுகின்றனர்.தமிழகத்தில் தனுஷ்கோடியில் இருந்து புறப்பட்ட 10 வீரர்கள் மதுரை வந்தடைந்தனர். அவர்களுக்கு போலீஸ் கமிஷனர் லோகநாதன், எஸ்.பி., அரவிந்த் தலைமையில் போலீசார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். ராணுவ வீரர்கள் போலீஸ் அதிகாரிகளுக்கு ராணுவ தொப்பி, நினைவு பரிசு வழங்கினர். இவ்வீரர்கள் இன்று (ஜூன் 13) மதுரையில் இருந்து பயணத்தை தொடர்கின்றனர். கலெக்டர் சங்கீதா கொடியசைத்து அனுப்பி வைக்கவுள்ளார். இந்த வீரர்கள் ஜூலை 25 ல் டில்லி சென்று சேர்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை