உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எட்டி மங்கலம் ரோடு யாருக்கு சொந்தம்; அதிகாரிகளால் மக்கள் அலைக்கழிப்பு

எட்டி மங்கலம் ரோடு யாருக்கு சொந்தம்; அதிகாரிகளால் மக்கள் அலைக்கழிப்பு

மேலுார் : மேலுார் - சேக்கிபட்டி மெயின் ரோட்டில் இருந்து எட்டிமங்கலம் செல்லும் தார் ரோடு பெயர்ந்து ஜல்லிக்கற்களாக மாறியதால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.எட்டிமங்கலம் மெயின் ரோட்டில் இருந்து கவட்டயம்பட்டி வரை உள்ள நான்கைந்து கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் விவசாயம். இப்பகுதியில் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் இல்லாததால் மாணவர்கள் மேலுாருக்கு செல்கின்றனர். இப்பகுதியில் ரோடு அமைத்து 8 ஆண்டுகளுக்கும் மேலாவதால் தார் ரோடு பெயர்ந்து ஜல்லிக்கற்களாக மாறிவிட்டது.எட்டிமங்கலம் ஸ்டாலின் கூறியதாவது: ரோடு பெயர்ந்ததால் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வர மறுக்கின்றன. வாகனங்கள் பஞ்சராகி விடுகின்றன. நடப்பவர்கள் காயமடைகின்றனர். புதிதாக ரோடு அமைக்க அதிகாரிகளிடம் கூறினால் ஊராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளும் ரோடு அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லை என அலைக்கழிக்கின்றனர். அதனால் எட்டிமங்கலம் ரோடு யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை கலெக்டர் விசாரித்து ரோடு சீரமைக்க வேண்டும், என்றனர்.ஊராட்சி செயலர் பிரபு கூறுகையில், நெடுஞ்சாலை துறையில் ஒப்படைக்க சொன்னதால் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி விட்டோம் என்றார்.நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் பாலமுருகன் கூறுகையில், ஊராட்சியில் இருந்து எங்கள் துறையிடம் ரோட்டை ஒப்படைக்கவில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி