உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரூ.3 கோடியில் குட்லாடம்பட்டி அருவி குட் சிற்றணைக்கு விமோசனம் கிடைக்குமா

ரூ.3 கோடியில் குட்லாடம்பட்டி அருவி குட் சிற்றணைக்கு விமோசனம் கிடைக்குமா

மதுரை : மதுரை குட்லாடம்பட்டி அருவி சுற்றுலாத்துறை சார்பில் ரூ.3 கோடியில் சீரமைக்கப்படவுள்ள நிலையில் மற்றொரு சுற்றுலா இடமான சிற்றணை நிலை கேள்விக்குறியாக உள்ளது.வாடிப்பட்டி அருகேயுள்ள குட்லாடம்பட்டி அருவி பாதை 2016ல் ரூ.30 லட்சம் செலவில் சுற்றுலாத்துறை சார்பில் சீரமைக்கப்பட்டு உடை மாற்றும் அறை கட்டப்பட்டது. 2018 ல் வீசிய கஜா புயலால் அருவிக்கு செல்லும் வழியில் பாறைகள் உருண்டு பாதையை மறைத்தன. 9 மாதங்கள் தண்ணீர் கொட்டும் இந்த அருவியில் குளிக்க பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்தது. கடந்தாண்டு வனத்துறை சார்பில் ரூ.6 கோடியில் சீரமைக்க திட்டமிடப்பட்டு ஒப்புதல் கிடைக்காமல் கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில் சுற்றுலாத்துறை சார்பில் ரூ.3 கோடி செலவில் அருவி செல்லும் பாதை, படிக்கட்டு, உடைமாற்றும் அறை சீரமைக்கப்படும் என நேற்றுமுன்தினம் சட்டசபையில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மதுரைக்கு விமோச்சனம் கிடைத்துள்ளது.இதேபோல சோழவந்தான் தென்கரை வைகையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த தடுப்பணை சிற்றணை. மதுரையில் குருவித்துறையையும் திண்டுக்கல்லில் சித்தர்கள் நத்தம் பகுதியையும் இணைக்கும் வகையில் ஆற்றின் குறுக்கே 410 மீட்டர் நீளத்திற்கு 1905 ல் கட்டப்பட்டது இந்த அணை. நுாறாண்டுகளை கடந்த அணையின் தண்ணீர் வழியும் படிக்கட்டுகள் சில ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது. தடுப்பணை பகுதிக்கு செல்வதற்கு 20 அடி உயரத்தில் இருந்து ஓரடி நீள, அகலத்தில் குறுகலான கல் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒருவர் ஏறினால் மற்றொருவர் இறங்கி வரமுடியாத அளவு ஆபத்தான படிக்கட்டாக உள்ளதால் பெரும்பாலானோர்ஆபத்தான முறையில் ஆற்றில் இறங்கி தடுப்பணைக்கு செல்கின்றனர்.ஆண்டில் ஆகஸ்ட் முதல் மார்ச் வரை தண்ணீர் நிரம்பி வழியும் என்பதால் மக்கள் இந்த தடுப்பணைக்கு படையெடுக்கின்றனர். சுற்றுலாத்துறை சார்பில் அகலமான படித்துறை அமைத்தால் மதுரை மக்களுக்கான பிரத்யேக நீர் சுற்றுலாத்தலமாகி விடும். வைகை கரையோரத்தில் போதுமான இடம் இருப்பதால் பார்க்கிங், கழிப்பறை, உடை மாற்றும் அறை, சிறுவர் பூங்கா அமைக்கலாம். போலீஸ் அவுட்போஸ்ட் அமைத்து கண்காணிக்கலாம்.மதுரையில் குட்லாடம்பட்டி, சிற்றணை தவிர வேறு பொழுதுபோக்கு வசதிகள் இல்லாததால் அரசு சிற்றணையை சுற்றுலா தலமாக்க முயற்சி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை