உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோடாங்கி தோப்பு தெரு மக்களுக்கு அவதியோ அவதி

கோடாங்கி தோப்பு தெரு மக்களுக்கு அவதியோ அவதி

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோடாங்கி தோப்பு தெருவின் ஒரு பகுதி மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி அவதியுறுகின்றனர்.மலைக்கு செல்லும் பாதையின் அருகிலிருந்து கிரிவல ரோடு, அரசு ஆஸ்பத்திரி அருகே வரை கோடாங்கி தோப்பு தெரு உள்ளது.இத்தெருவின் பாதி வீடுகளுக்கு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. தெரு விளக்குகள் எரிகின்றன.தெருவின் மற்றொருபுறம் அரசு ஆஸ்பத்திரியை ஒட்டியுள்ள 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்காக ஆஸ்பத்திரி பின்புறம் கட்டப்பட்ட பொதுக் கழிப்பறை 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி பூட்டிக் கிடக்கிறது. அங்கு தண்ணீர் வசதியும் இல்லை. அப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி அமைக்கப்பட்ட காலம் முதல் தண்ணீர் நிரப்பப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளது. தொட்டியில் தண்ணீர் நிரப்ப அமைத்திருந்த குழாய்களை காணவில்லை என அப்பகுதியினர் கூறுகின்றனர்.அப்பகுதியில் தெரு விளக்குகள் எரிவதில்லை. கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படுவதில்லை. ரோடுகள் பராமரிக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அப்பகுதி மக்கள் மிகுந்த அவதியுறுகின்றனர். தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை