மகளிர் தினம்
மதுரை; மதுரை விளாச்சேரியில் ஐஸ்வர்யம் அறக்கட்டளை சார்பாக நேத்ராவதி வலி நிவாரண மையத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. நிர்வாக அறங்காவலர் டாக்டர் பாலகுருசாமி வரவேற்றார். மாவட்ட நீதிபதி ஜெயக்குமாரி ஜெமிரத்னா, திருநகர் 95வது வார்டு கவுன்சிலர் இந்திராகாந்தி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். திருநகர் ஜியான்ட்ஸ் குரூப் சார்பாக அறக்கட்டளையில் பணிபுரியும் பெண்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.