உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கஞ்சா வழக்கில் 10 ஆண்டு சிறை

கஞ்சா வழக்கில் 10 ஆண்டு சிறை

மதுரை : செக்கானுாரணி அருகே கல்புளிச்சான்பட்டியில் உள்ள தோட்டத்தில் ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பதுக்கிவைக்கப்பட்டிருந்தது. அதை 2018 ல் வாகனத்தில் கடத்த முயன்ற போது 52 கிலோ கஞ்சாவை செக்கானுாரணி போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக செல்வம் மற்றும் அவரது சகோதரர் ராமர் மீது வழக்கு பதிந்தனர். போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. நீதிபதி செங்கமலச் செல்வன் விசாரித்தார். சகோதரர்கள் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !