உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குவியுது மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் 3 நாளில் 10 ஆயிரம் பேர் மனு

குவியுது மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் 3 நாளில் 10 ஆயிரம் பேர் மனு

மதுரை: 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் குவிகின்றன.இதற்காக மாநிலம் முழுவதும் முகாம்கள் நடத்தி மக்களிடம் விண்ணப்பங்களை பெறுகின்றனர். 45 நாட்களுக்குள் இதற்கு தீர்வு காண வேண்டும் அல்லது பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருப்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் மனுக்களை வழங்கி வருகின்றனர்.ஜூலை 15 முதல் ஆக.,15 வரை நடக்கும் இம்முகாமில் முதல் 3 நாட்கள் முடிவடைந்துள்ளன. மதுரை மாவட்டத்தில் மூன்று நாட்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. முகாம் நடக்கும் பகுதியில் ஒரு வாரம் முன்னதாக தன்னார்வலர்கள் வீடுவீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். முகாம் நடக்கும் இடம், நேரம் பற்றிக் கூறி, அவர்களிடம் தேவையான குறைகளை கேட்டு விண்ணப்ப படிவங்களை வழங்கி வருகின்றனர். மகளிர் உரிமைத் தொகை மனுவை முகாமில் மட்டுமே வழங்குகின்றனர். 3 நாட்களிலும் மாவட்டம் முழுவதும் பட்டா மாறுதல், முதியோர் விண்ணப்பம், ரேஷன் பிரச்னைகள் உட்பட பொதுவான கோரிக்கைகளுக்காக 7331 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மகளிர் உரிமைத் தொகைக்காக மட்டுமே 10 ஆயிரத்து 675 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.நேற்று வரை நகர்ப்பகுதியில் 59 ஆயிரத்து 670 வீடுகளிலும், கிராமப் பகுதியில் 54 ஆயிரத்து 140 வீடுகளிலும் முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை