உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒரே நாளில் 154 டன் விளைபொருட்கள் விற்பனை திருமங்கலம் ஒழுங்குமுறை கூடத்தில்

ஒரே நாளில் 154 டன் விளைபொருட்கள் விற்பனை திருமங்கலம் ஒழுங்குமுறை கூடத்தில்

திருமங்கலம்: திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று ஒரே நாளில் 154 டன் விளைபொருட்கள் ரூ. 42 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.விருதுநகர், கள்ளிக்குடி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், பாப்புநாயக்கன்பட்டி, எரிச்சநத்தம், உசிலம்பட்டி ஆகியோரின் 1 லட்சத்து 4066 ஆயிரம் கிலோ மக்காச்சோளம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ. 24 க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ 21.80க்கும் விலை போனது. இதன் மூலம் ரூ. 24 லட்சத்து 11 ஆயிரத்து 690க்கு வர்த்தகம் நடந்தது.அரியலுார் மாவட்டம் குடிக்காடு கிராம விவசாயியின் 3 ஆயிரத்து 510 கிலோ நாட்டுக்கம்பு விற்பனை மூலம் ரூ. 2 லட்சத்து 33 ஆயிரத்து 415 க்கும், தங்கலாச்சேரி, கொடிக்குளம்,விடத்தகுளம் கிராம விவசாயிகளின் 311.800 கிலோ கொப்பரை விற்பனை மூலம் ரூ. 23 ஆயிரத்து 928க்கும் வர்த்தகம் நடந்தது.தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரை விவசாயியின் 880 கிலோ கருப்புகவுனி விற்பனை மூலம் ரூ. 54 ஆயிரத்து 560க்கும், சேடப்பட்டி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், நல்லியதேவன்பட்டி, திருமங்கலம் பகுதி விவசாயிகளின் 19 ஆயிரத்து 950 கிலோ குதிரைவாலி மூலம் ரூ. 8 லட்சத்து 63 ஆயிரத்து 138க்கும் வர்த்தகம் நடந்தது.சிவகங்கை, திருமங்கலம் விவசாயிகளின் 17 ஆயிரத்து 315 கிலோ நெல் மூலம் ரூ. 4 லட்சத்து 29 ஆயிரத்து 862 க்கும், கிருஷ்ணாபுரம், திருமங்கலம் விவசாயிகளின் 7977 கிலோ அக் ஷயா நெல் விற்பனை மூலம் ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்து 466க்கும் வர்த்தகம் நடந்தது. இவ்வகையில் நேற்று ஒரே நாளில் ரூ. 42 லட்சத்து 52 ஆயிரத்து 59க்கு வர்த்தகம் நடந்துள்ளது.இதுதொடர்பான விபரங்களுக்கு கண்காணிப்பாளர் வெங்கடேஷை 90251 52075, மேற்பார்வையாளரை 96008 02823, சந்தை பகுப்பாளரை 87543 79755ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ