உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 160 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

160 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

சிலைமான்: ஆந்திராவில் இருந்து மதுரை வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த 160 கிலோ கஞ்சா பறிமுதல் -செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர்.ஆந்திராவில் இருந்து மதுரை வழியாக ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா பொட்டலங்கள் கடத்தவுள்ளதாக போலீசிற்கு தகவல் கிடைத்தது. ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சிலைமான் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மதுரை பதிவெண் காரை சோதனையிட்டதில் சாக்கு மூடைகளில் 160 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. இதுதொடர்பாக ராமேஸ்வரம் குத்துக்கால் நேசகுமார் 27, ஈரோடு பெரியவளசு ஜான் பெனடிக் 29. ஆகியோரை இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.கஞ்சா, போதைப்பொருட்கள் கடத்தல், விற்பனை குறித்து 94981 81206ல் தகவல் தெரிவிக்கலாம். ரகசியம் காக்கப்படும் என மதுரை எஸ்.பி. அரவிந்த் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ