உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மக்களுடன் முதல்வர் திட்டம் ரூ.1.66 கோடியில் உதவிகள்

மக்களுடன் முதல்வர் திட்டம் ரூ.1.66 கோடியில் உதவிகள்

மதுரை: மதுரை ஆலாத்துாரில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் சங்கீதா தலைமை வகித்தார்.அமைச்சர் மூர்த்தி ரூ.1.66 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கி பேசியதாவது: பொதுமக்களின் இல்லங்களுக்கே நேரடியாகஅரசு சேவை என்ற நோக்கில் இத்திட்டத்தை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். மதுரை மாவட்டத்தில் இத்திட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தி 9539 மனுக்கள் பெறப்பட்டன. இதுவரை 8143 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்குட்பட்டு வழங்கப்படாத 88 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.மேலும் ஒரு வருவாய் வட்டம் என்ற அளவில் கலெக்டர் அங்கு சென்று தங்கியிருந்து மனுக்களை பெற்று தீர்வு காணும் திட்டத்தையும் முதல்வர் செயல்படுத்தியுள்ளார். இப்படி இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சிறப்பு வாய்ந்த மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றார்.வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சித் தலைவர் சூரியகலா, ஒன்றியக்குழு தலைவர் வீரராகவன், ஊராட்சி தலைவர் சரண்யா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி