மேலும் செய்திகள்
ஜல்லிக்கட்டில் ஒருவர் பலி
18-May-2025
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் கீழக்கரை ஏறு தழுவுதல் அரங்கத்தில் 16வது ஜல்லிக்கட்டு மதுரை வில்லாபுரம் கிடா முட்டு நண்பர்கள் சார்பில் நடந்தது. திருமங்கலம் ஆர்.டி.ஓ., சிவஜோதி துவக்கி வைத்தார். 715 காளைகள், 400 வீரர்கள் களம் கண்டனர். வெற்றி பெற்ற காளை, வீரர்களுக்கு சைக்கிள், டிரசிங் டேபிள், காஸ் ஸ்டவ், கட்டில், பீரோ, மிக்ஸி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. 29 பேர் காயமுற்றனர். இவர்களில் சத்திரபட்டி எஸ்.எஸ்.ஐ., சொக்கலிங்கம் 55, உட்பட 3 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
18-May-2025