உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பெங்களூரிலிருந்து மதுரைக்கு புகையிலை கடத்திய 2 பேர் கைது

பெங்களூரிலிருந்து மதுரைக்கு புகையிலை கடத்திய 2 பேர் கைது

மதுரை,:தமிழகத்தில் புகையிலை, கூல் லிப்பிற்கு தடை உள்ள நிலையில், கூடுதல் விலைக்கு அவற்றை விற்க, பெங்களூரில் இருந்து மதுரைக்கு 495 கிலோவுடன் வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். மதுரை தெப்பக்குளம் - அனுப்பானடி ரோடு சந்திப்பில், நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்டபோது, பல மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன.காரில் வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த ரமேஷ்குமார், 25, தினேஷ்குமார், 29, ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் தமிழகத்தில் தடை உள்ள நிலையில் கூடுதல் விலைக்கு மொத்த வியாபாரிகளிடம் விற்பதற்காக பெங்களூரில் இருந்து கடத்தி வந்தது தெரிந்தது. இவர்களிடம் இருந்து, 339 கிலோ புகையிலை, 134 கிலோ கூல் லிப், 22 கிலோ பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை