உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கொலை வழக்கில் 2 பேர் கைது

கொலை வழக்கில் 2 பேர் கைது

சோழவந்தான் ; கடந்த 2022 ஆக.,9ல் மேலக்கால் வைகை ஆற்றில் மிதந்த வாலிபர் உடல் மீட்கப்பட்டது. நேற்று சோழவந்தான் பகுதி வி.ஏ.ஓ.,விடம் சரண் அடைந்த மதுரை சொக்கலிங்க நகர் செந்தில் 48, சம்மட்டிபுரம் சையது ஜாபர் அலி 41, வில்லாபுரம் பகுதி பாலமுருகனை 35, பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் மதுபோதையில் கொலை செய்ததாக கூறினர். மேலும் இவர்கள் நண்பர்களுடன் சமீபத்தில் மது அருந்திய போது கொலை குறித்து உளறியுள்ளனர். இத்தகவல் பாலமுருகன் நண்பர்களிடம் பரவியதால் போலீசார் கைது செய்வார்கள் என்ற அச்சத்தில் சரணடைவதாக கூறியுள்ளனர். ஆற்றில் வந்த உடல் பாலமுருகனுடையது என்பதை அறிந்த சோழவந்தான் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.பாலமுருகன் அவ்வப்போது தலைமறைவு ஆவதும், பின் வருவதுமாக இருப்பார் என்பதால் அவரது குடும்பத்தினர் தேடவில்லை என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ