உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வனத்துறை ஓடையில் ரோடு பேரூராட்சிக்கு ரூ 2 கோடி வீண்

வனத்துறை ஓடையில் ரோடு பேரூராட்சிக்கு ரூ 2 கோடி வீண்

பேரையூர்: பேரையூர் முருகன் கோயில் அருகே மொட்டமலை உள்ளது. இதைச் சுற்றி கிரிவலப் பாதை அமைக்க நபார்டு திட்டத்தின் மூலம் ரூ. 2 கோடி செலவில் 3 கி.மீ., துாரத்திற்கு ரோடு அமைக்கும் பணி நடக்கிறது.இப்பாதையில் நீர் வழித்தடங்கள், தனியார், வனத்துறை நிலம் உள்ளது. இதை ஆக்கிரமித்து ரோடு அமைப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்ததால் பணி நிறுத்தப்பட்டது.திட்டமிட்டு செயல்படாத பேரூராட்சி நிர்வாகத்தால் ரூ.2 கோடி வீணடிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர். செயல் அலுவலர் ஜெயதாராவிடம் கேட்டபோது, ''ரோடு அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. யாருக்கு சொந்தமான இடம் என்பது பொறியாளருக்குதான் தெரியும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்