உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு ரவுடி உட்பட 2 பேர் கைது

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு ரவுடி உட்பட 2 பேர் கைது

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே முன்விரோதம் காரணமாக வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசிய புதுச்சேரி ரவுடி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி, ஆட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி சுனில், 24. சித்தலம்பட்டில் உள்ள தாய் வீட்டிற்கு சென்ற தனது மனைவி சினேகாவை பார்க்க, கடந்த 8ம் தேதி சுனில் சென்றுள்ளார். அன்று இரவு சுனில் மற்றும் அவரது நண்பர்கள் யாசிக், கவியரசன் ஆகியோர் மது அருந்தியபோது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சுனில், பேனா கத்தியால் யாசிக்கின் தொடையில் கிழித்துள்ளார். இதனை கவியரசன், தட்டிக்கேட்டுள்ளார். இதனால் கவியரசனுக்கும், சுனிலுக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது.அதை தொடர்ந்து, கடந்த 10ம் தேதி இரவு 11:00 மணிக்கு கவியரசன் வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில், அங்கு கட்டப்பட்டிருந்த பசுமாடு காயம் அடைந்தது.கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். முன் விரோதம் காரணமாக சுனில், அவரது கூட்டாளி சேர்ந்து பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.திருக்கனுாரில் சுனில், அவரது கூட்டாளி மதுரப்பாக்கத்தைச் சேர்ந்த கணேஷ்ராஜ், 22; ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்து, விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ