உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஹோட்டலில் ‛கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு

ஹோட்டலில் ‛கிரில் சிக்கன் சாப்பிட்ட 22 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு

மதுரை:மதுரை மாவட்டம் சோழவந்தான் தென்கரையில் உள்ள, ப்ரீடா ஹோட்டலில் , 'கிரில் சிக்கன்' சாப்பிட்ட 22 பேருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது.சோழவந்தான் சுற்றுப்பகுதியை சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் இரவு இந்த ஹோட்டலில் கிரில் சிக்கன் சாப்பிட்டுள்ளனர். பெரும்பாலானோருக்கு அன்றிரவே வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. நேற்று காலை வரை சோழவந்தான் அரசு மருத்துவமனையில் 22 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், ஒன்பது பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். உள்நோயாளியாக சிகிச்சை பெறும் குருவித்துறையைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் மதுசூதனன், 21, கூறுகையில், ''நண்பர்களுடன் சேர்ந்து கிரில் சிக்கன் வாங்கி சாப்பிட்டோம். வீடு வந்த பின் சோர்வாக இருந்தது. ''காலையில் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில், சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு வந்தோம். நண்பர்களுக்கு பரவாயில்லை. எனக்கு பாதிப்பு அதிகமானதால், சிகிச்சையில் உள்ளேன்,'' என்றார். உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஜெயராம பாண்டியன் கூறியதாவது:ஹோட்டலை ஆய்வு செய்த போது கிரில் சிக்கன்' மீதமோ, இறைச்சியோ இல்லை. லைசென்ஸ் பெற்றுள்ளனர். கடை சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால் அபராதம் விதித்துள்ளோம். உணவு மாதிரிகளை, மதுரை அரசு மருத்துவக்கல்லுாரி மைக்ரோ பயாலஜி ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். ஆய்வு முடிவுகளின் படி அந்த ஹோட்டல் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை