அக்.29ல் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு
மதுரை: மதுரை மாவட்ட வாக்காளர் வரைவு பட்டியல் அக். 29ல் வெளியிடப்பட உள்ளது.வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நடந்து வருகிறது. அக்.29ல் வரைவு பட்டியலை கலெக்டர் சங்கீதா வெளியிடுவார். ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய விண்ணப்பித்தோர் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, பட்டியலில் இடம்பெற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கான பணிகளை கலெக்டரின் நேர்முக உதவியாளர் கண்ணன், தேர்தல் தாசில்தார் ஹேமா செய்து வருகின்றனர்.அக்.29ல் வெளியிடப்படும் பட்டியல் ஓட்டுச்சாவடிகள், தாலுகா, மாவட்ட, மாநகராட்சி, மண்டல அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்படும். அதைதொடர்ந்து புதிதாக சேர்க்கை, நீக்கம், திருத்தம் செய்யும் பணிகள் துவங்கும். தீவிர வாக்காளர் சேர்க்கைக்காக நவ.9, 10, இரண்டாம் கட்டமாக நவ.23, 24ல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு மனுக்கள் பெறப்படும். 2025, ஜன.1ல் 18 வயது பூர்த்தியடைவோர் இம்முகாம்களில் விண்ணப்பம் பெற்று பெயர்களை சேர்க்கலாம்.இம்மனுக்களை அடுத்தாண்டு ஜன.6ல் திருத்தப்பட்ட வாக்காளர் இறுதிப் பட்டியலில் வெளியிடுவர். தொடர்ந்து வாக்காளர் சேர்க்கை பணிகளும் நடைபெறும்.