உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விளையாட்டு அரங்கில் குப்பை விடுதியில் ‛வேஸ்ட் கட்டில்கள்

விளையாட்டு அரங்கில் குப்பை விடுதியில் ‛வேஸ்ட் கட்டில்கள்

மதுரை : மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி வளாக விளையாட்டு அரங்கில் மரக்கிளைகளை குவித்தும் ஆண்கள் விடுதியில் பழைய கட்டில்களை குவித்தும் ஆங்காங்கே குப்பையை குவித்திருப்பதால் வளாகம் பாழடைந்த தோற்றத்தை தருகிறது.தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி வளாகம் மட்டும் 'பளிச்'சென காணப்படுவதில்லை. இங்குள்ள பெரிய விளையாட்டு மைதானத்தை பாதியாக குறைத்து மருத்துவமனை வளாகம் கட்டப்பட்டுள்ளது. தற்போதுள்ள வாலிபால் அரங்கின் முன்பக்கத்தில் வெட்டிய மரக்கிளைகளை அப்புறப்படுத்தாமல் மாதக்கணக்கில் விட்டுள்ளனர். காய்ந்த சுள்ளிகள் குப்பையாக குவிந்து கிடக்கிறது.இங்குள்ள மழைநீர் வடிகால் பாதை எங்கு ஆரம்பித்து எங்கு செல்கிறது என்றே தெரியவில்லை. பெரும்பாலான மழைநீர் வடிகால் பாதையில் பிளாஸ்டிக் குப்பை தேங்கி தண்ணீர் செல்ல வழியின்றி அடைத்துள்ளது. சில இடங்களில் மழைநீர் வடிகாலுக்காக கட்டப்பட்ட பக்கவாட்டு சுவர்கள் சரிந்து தண்ணீர் செல்ல முடியாத படி உள்ளது. ஆங்காங்கே மழைநீர் வடிகால் குழாய்கள் மேற்கொண்டு செல்லாமல் முடிவடைந்து நிற்கிறது. இவ்வளவு பெரிய வளாகத்தில் மழைநீரை வடிகாலை சரியாக பராமரித்தால் அந்த நீரை அப்படியே நிலத்தடியில் திருப்பி விட்டு நிலத்தடி நீரை பராமரிக்கலாம். இத்தனைக்கும் இந்த கல்லுாரிக்கு என தனியாக பொதுப்பணித்துறை கட்டடம் மற்றும் எலக்ட்ரிக்கல் பிரிவுகள் செயல்படுகின்றன.ஆண்கள் விடுதியின் முன்பக்கத்தில் புதர் மண்டி காணப்படுகிறது. பக்கவாட்டில் சேதமடைந்த ஓட்டு கட்டடத்தின் கீழே நுாற்றுக்கும் மேற்பட்ட இரும்பு கட்டில்கள் சேதமடைந்த நிலையில் குவிந்து கிடக்கின்றன. இவற்றை முறையாக ஏலம் விட்டால் வளாகமும் சுத்தமாகும், வருமானமும் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை