4 ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தம்
மதுரை:சென்னை எழும்பூரில் சீரமைப்புப் பணிகள் நடப்பதால் தேஜஸ் உட்பட 4 ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ஜூன் 20 முதல் ஆக., 18 வரை மதுரை 'தேஜஸ்' ரயில் (22671) காலை 6:22 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கத்தில் (22672) இரவு 9:25 மணிக்கு தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.ஜூன் 20 முதல் ஆக., 18 வரை தாம்பரத்தில் இருந்து திருச்செந்துார் ரயில் (20605) மாலை 4:27 மணிக்கும், கொல்லம் ரயில் (16101) மாலை 5:27 மணிக்கும் புறப்படும். மறுமார்க்கம் ஜூன் 19 முதல் ஆக., 17 வரை ரயில் (16102) அதிகாலை 2:45 மணிக்கும், ரயில் (20606) காலை 10:00 மணிக்கும் தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.ஜூன் 20 முதல் ஆக., 19 வரை குருவாயூர் ரயில் (16127) தாம்பரத்தில் இருந்து காலை 10:47 மணிக்கு புறப்படும். மறுமார்க்கம் ரயில் (16128) ஜூன் 18 முதல் ஆக., 18 வரை இரவு 7:45 மணிக்கு தாம்பரத்துடன் நிறுத்தப்படும். மதுரை - பிகானீர் ரயில்
ஜூன் 26, ஜூலை 3, 10, 17, 24, 31, ஆக., 7, 14ல் மதுரை - பிகானீர் ரயில் (22631) எழும்பூரில் நிற்காது. பயணிகள் வசதிக்காக சென்னை பீச் ஸ்டேஷனிற்கு இரவு 8:00 மணிக்கு சென்று 15 நிமிடங்கள் நின்று செல்லும். ராமேஸ்வரம் - மதுரைபாசஞ்சர் ரத்து
மதுரை கோட்டத்திற்குட்பட்ட பரமக்குடி - சத்திரக்குடி இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக ராமேஸ்வரம் - மதுரை பாசஞ்சர் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.ஜூன் 12 (நேற்று) முதல் ஜூலை 4 வரை (ஞாயிறு தவிர்த்து) காலை 11:40 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம் - மதுரை பாசஞ்சர் (56714) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 2:40 மணிக்கு புறப்பட்டு மாலை 5:50 மதுரை வரும் வகையில் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06714) இயக்கப்படுகிறது.