உரிமைத்தொகை பெற 402 மனு
வாடிப்பட்டி; ஜெமினிப்பட்டி ஊராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்ட முகாம் நடந்தது. வெங்கடேசன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, ராமையன்பட்டி, பூச்சம்பட்டி, விராலிப்பட்டி ஊராட்சி மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. தாசில்தார்கள் ராமச்சந்திரன், பார்த்திபன், வட்ட வழங்கல் அலுவலர் முருகன், பி.டி.ஓ.,க்கள் லட்சுமி காந்தம், கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தனர். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பால ராஜேந்திரன், பசும்பொன்மாறன், நகர் செயலாளர் பால்பாண்டியன் பங்கேற்றனர். வருவாய் துறை 222, இதர துறைகளுக்கு 369, கலைஞர் உரிமை தொகை பெற 402 உட்பட மொத்தம் 993 மனுக்கள் பெறப்பட்டன.