உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாற்றுத்திறனாளிகள் 404 பேர் கைது

மாற்றுத்திறனாளிகள் 404 பேர் கைது

மதுரை : மதுரையில் சிறைநிரப்பும் போராட்டத்தில் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 404 பேர் கைது செய்யப்பட்டனர்.கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகையை ஆந்திராவில் வழங்குவது போல ரூ.6 ஆயிரம், ரூ.10 ஆயிரம் மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாவட்ட பொருளாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். செயலாளர் பாலமுருகன், இணைச் செயலாளர் குமரவேல், துணை செயலாளர் சொர்ணவேல் உட்பட 110 பேரை போலீசார் கைது செய்தனர்.

பேரையூர்

பேரையூர் தாலுகா அலுவலக முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 125 பெண்கள் உட்பட 294 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி