உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிறுவன் மூளைச்சாவு 5 பேருக்கு மறுவாழ்வு

சிறுவன் மூளைச்சாவு 5 பேருக்கு மறுவாழ்வு

மதுரை:விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த சிறுவனின் உடல் உறுப்புகள், ஐந்து பேருக்கு தானமாக வழங்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஆனந்த போதி குமரன், 15; பிளஸ் 1 படித்தார். செப்., 10 இரவு 7:30 மணிக்கு வீட்டருகே டூ - வீலர் மோதியதில் தலையில் காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில், செப்., 11 அதிகாலை 3:30 மணிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அதிகாலை 5:45 மணிக்கு மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, மகனது உடல் உறுப்புகளை தானமாக தர ராஜேந்திரன் சம்மதித்தார். கல்லீரல், ஒரு சிறுநீரகம், திருச்சி காவேரி மருத்துவமனைக்கும்; மற்றொரு சிறுநீரகம், மதுரை வேலம்மாள் மருத்துவமனைக்கும்; இரண்டு கருவிழிகள், மதுரை அரசு மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. சிறுவனின் உடலுக்கு, அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
செப் 14, 2025 05:41

உடல் உறுப்புகளை தனியார் மருத்துவமனைகளுக்கு கொடுத்து, அவர்கள் பயனாளிகளிடம் பல லட்சம் கொள்ளையடிக்க ஏற்பாடு செய்யும் இந்த முறை புரியல.


புதிய வீடியோ