உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புதிய ரேஷன் கார்டுக்கு 500 பேர் காத்திருப்பு

புதிய ரேஷன் கார்டுக்கு 500 பேர் காத்திருப்பு

பேரையூர் : பேரையூர் தாலுகாவில் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த 500க்கும் மேற்பட்டோருக்கு விரைவாக வழங்க வலியுறுத்தியுள்ளனர். புதிதாக திருமணமானோர் பலர் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்துள்ளனர். அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவது உட்பட பல்வேறு சலுகைகளுக்கும் ரேஷன்கார்டு இன்றியமையாதது என கருதுவதால் கார்டுக்கு விண்ணப்பிப்போர் அதிகமாக உள்ளனர். ஆன்லைனில் விண்ணப்பிப்போர் நாள்தோறும் அலுவலகங்களுக்கு சென்று கார்டு வந்து விட்டதா என்று தொடர்ந்து கேட்டு வருகின்றனர். அவர்கள் கூறியதாவது: புதிய ரேஷன் கார்டுக்காக பெற்றோர் கார்டில் இருந்து எங்கள் பெயரை நீக்கி விட்டோம். இதனால் அவசரத்திற்கு பயன்படுத்த எங்களிடம் கார்டு இல்லை. எனவே, புதிய ரேஷன் கார்டு இல்லாமல் முக்கிய தேவைகளுக்கு அடையாளமாக கார்டு இல்லை. இலவச அரிசி மற்றும் சலுகை விலையில் சர்க்கரை கோதுமை உள்ளிட்டவற்றை வாங்கவும் முடியவில்லை. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகள் சேர்க்கும் பணி நடப்பதால் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தோருக்கு சீக்கிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். வருவாய் அலுவலர்கள் கூறுகையில், ''கடந்த மே வரை புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் விண்ணப்பித்தோருக்கு விரைவில் வழங்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி