லாரி கவிழ்ந்து 7 மாடுகள் பலி
கள்ளிக்குடி; திருச்சியில் இருந்து 33 மாடுகள் விற்பனைக்காக விருதுநகர் மாவட்டம் சாத்துாருக்கு டாரஸ் லாரியில் கொண்டு செல்லப்பட்டது.லாரியை சாத்துாரைச் சேர்ந்த டிரைவர் லட்சுமி காந்தன் ஓட்டி சென்றார். கள்ளிக்குடி நல்லம நாயக்கன்பட்டி அருகே சென்றபோது லாரியின் முன் சக்கரம் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோட்டோரத்தில் கவிழ்ந்தது. இதில் 7 மாடுகள் பலியாகின. மற்ற மாடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.சிகிச்சைக்கு பின் மாடுகள் விருதுநகரில் உள்ள கோசலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விதிமுறைகளை பின்பற்றாமல் மாடுகளை ஏற்றி வந்த டிரைவர் லட்சுமி காந்தன் மீது கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிந்தனர்.