உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பஸ் கவிழ்ந்து 7 பேர் காயம்

பஸ் கவிழ்ந்து 7 பேர் காயம்

மதுரை:கோவையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் அரசு பஸ் நேற்று இரவு மதுரை ஆரப்பாளையத்திற்கு வந்தது. டிரைவர் லட்சுமணன் பஸ்சை ஓட்டி வந்தார். பைபாஸ் ரோடு சிக்னலில் இருந்து ஆரப்பாளையம் ஏ.ஏ.ரோடுக்கு திரும்புகையில் பஸ் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சென்டர் மீடியனில் மோதிய பஸ் நடுரோட்டில் கவிழ்ந்தது.பஸ்சில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இவர்களில் 7 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. போலீசார் அவர்களை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். கவிழ்ந்த வாகனத்தை மீட்கும் பணி நடந்ததால் சிறிது நேரம் அந்த ரோட்டில் போக்குவரத்து தடைபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ