மேலும் செய்திகள்
தேசிய போட்டியில் கல்வி பள்ளி மாணவர்கள் சாதனை
28-Sep-2025
சோழவந்தான்: நகரி கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் ஸ்கூல் 'எஜுகேஷன் வேர்ல்ட்' நிறுவனம் நடத்திய இந்தியாவின் மிகவும் மதிக்கப்பட்ட கே- 12 கல்வி நிறுவனங்கள் பிரிவில் தேசிய அளவில் 7ம் இடம் பெற்றுள்ளது. புது டில்லியில் நடந்த இந்தியா பள்ளி தரவரிசை 2025--26 விருது வழங்கும் விழாவில் பள்ளியின் முதல்வர் ஷர்மிளா இவ்விருதினை பெற்றார். இந்த அங்கீகாரம் பள்ளியின் தரமான கல்வி, மாணவர்களின் முழுமையான வளர்ச்சி, புதுமையான கற்பித்தல் முறைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. பள்ளி தலைவர் செந்தில்குமார், முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்களை பாராட்டினர்.
28-Sep-2025