உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  அரசு ஊழியர் சங்கம் மறியல் மதுரையில் 92 பேர் கைது

 அரசு ஊழியர் சங்கம் மறியல் மதுரையில் 92 பேர் கைது

மதுரை: மதுரையில் நேற்று மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 92 பேரை போலீசார் கைது செய்தனர். பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும். அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, எம்.ஆர்.பி.செவிலியர்கள் உட்பட தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றுவோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 21 மாத நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். கருணை அடிப்படையிலான பணிநியமனத்தை மீண்டும் 25 சதவீதமாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்சங்களை வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக நேற்று மதுரை பெரியார் பஸ்ஸ்டாண்ட் அருகே கட்டபொம்மன் சிலை அருகே மறியலில் ஈடுபட்டனர் . மாவட்ட தலைவர் தமிழ் தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் சந்திரபாண்டி, மகேந்திரன், மனோகரன் முன்னிலை வகித்தனர். இணைச் செயலாளர்கள் பெரியகருப்பன், பாண்டிச்செல்வி, ராம்குமார், சுஜாதா உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் சந்திரபோஸ் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். முன்னாள் பொதுச் செயலாளர் செல்வம், அரசு கல்லுாரி, கல்வித்துறை ஊழியர் சங்க நிர்வாகி ஞானப்பிரகாசம், கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க நிர்வாகி நவநீதகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் பரமசிவன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி