உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயில் யானைகளைபாதுகாக்க வழக்கு

கோயில் யானைகளைபாதுகாக்க வழக்கு

மதுரை : மதுரை வழக்கறிஞர் ஹரிகரன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி சண்முகநாதர் கோயில் யானை சுப்புலட்சுமி. தீ விபத்தில் காயமடைந்து இறந்தது. பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாததே தீ விபத்திற்கு காரணம். கோயில்களில் வளர்க்கப்படும் யானைகளுக்கு விதிகள்படி காற்றோட்டமான இடவசதி, பாதுகாப்பான கான்கிரீட் கட்டடம் அமைக்க வேண்டும். கால் பாதம் காயமடையாமல் இருக்க தரையில் மணல் பரப்ப வேண்டும். கோயில்களில் வளர்க்கப்படும் யானைகளை பராமரிப்பதில் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சுந்தர்மோகன் அமர்வு: இதுபோல் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன எனக்கூறி, அறநிலையத்துறை கமிஷனர், வனத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை