உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அடிப்படை வசதிகள் இல்லாத பத்திரப்பதிவு அலுவலகம்

அடிப்படை வசதிகள் இல்லாத பத்திரப்பதிவு அலுவலகம்

திருமங்கலம், : திருமங்கலம் புதிய பத்திரப்பதிவு அலுவலகம் முறையான திட்டமிடுதலின்றி இடநெருக்கடியான இடத்தில் அமைத்ததால் பத்திரப்பதிவுக்கு வரும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.பத்திரம் பதிய வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதிகள் இதுவரை செய்யப்படவில்லை. பொதுமக்கள் ஓய்வெடுக்க அமைக்கப்பட்ட தகர கொட்டகை 'பார்க்கிங்' ஆகவும், ஜெனரேட்டர் இருக்கும் இடமாகவும் மாறிவிட்டதால் மக்கள் வெயில் மழையில் அவதிப்படுகின்றனர்.யார் யார் அலுவலர், பொதுமக்கள், புரோக்கர் என்று வழிகாட்டல் இல்லாததால் மாற்று நபர்களிடம் ஏமாறும் சூழ்நிலை உள்ளது. அலுவலக வாசலில் பழ விற்பனை வண்டி, வாகனங்கள் நிரந்தரமாக நிறுத்தி வைத்திருப்பதால் பத்திரப்பதிவுக்கு வருவோர் தங்கள் வாகனங்களை ரோட்டில் நிறுத்துகின்றனர். அதிக போக்குவரத்து நிறைந்த மதுரை ரோட்டில் விபத்து அபாயம் ஏற்படுகிறது. மேலும் கழிப்பறை வசதி இல்லாததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.எனவே பத்திரப்பதிவு துறை உரிய நடவடிக்கை எடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, பத்திரம் பதிய வருபவர்களுக்கு உரிய இருக்கை வசதிகள், கழிப்பறை வசதி செய்து தர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ