உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வறண்டு கிடக்கும் இரும்பாடி கண்மாய்

வறண்டு கிடக்கும் இரும்பாடி கண்மாய்

வாடிப்பட்டி: நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பால் 2 ஆண்டுகளாக இரும்பாடி கண்மாய் வறண்டு கிடக்கிறது.வாடிப்பட்டி ஒன்றியம் இரும்பாடி ஊராட்சியில் உள்ள இக்கண்மாய் 18 ஏக்கர் பரப்பளவு கொண்டது. வைகை - பெரியாறு பாசன வடகரை கண்மாய் கிளை கால்வாய் மூலம் இதற்கு நீர் வரத்துள்ளது. பாலகிருஷ்ணாபுரம் வரை இக்கால்வாய் பாசனம் கிடைக்கிறது.அதன்பின் மதுக்கடை, வெற்றிலை சங்கம் முதல் சின்ன இரும்பாடி கண்மாய் வரை கற்களால் கட்டிய பழமையான பாசன கால்வாய் புதர்மண்டி, மண்மேவி, ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால் 2 ஆண்டுகளாக நீர்வரத்து இல்லை. இந்த கண்மாயின் இரு மடைகளும் சேதமடைந்துள்ளன. பாசனநீரால் கண்மாயை நிரப்ப ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ