உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஏழை சிறுவருக்கு தீபாவளி புத்தாடை

ஏழை சிறுவருக்கு தீபாவளி புத்தாடை

மதுரை, : தமிழ்நாடு உதவி ஆணையர், வணிகவரி அலுவலர், துணை வணிகவரி அலுவலர் சங்கம் சார்பில், வணிகவரிப் பணியாளர் சங்க 64வது அமைப்பு தினம், தீபாவளியையொட்டி ஏழை சிறுவர்களுக்கு புத்தாடை, மத்தாப்பு, உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அலுவலர் சங்க கோட்டத் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் திரவியராஜா, கோட்ட செயலாளர் குணாளன் முன்னிலை வகித்தனர். கோட்ட இணை ஆணையர் கீதாபாரதி, துணை ஆணையாளர்கள் தீபா, பாலகிருஷ்ணன் குழந்தைகளுக்கு புத்தாடை, இனிப்பு வழங்கினர். அலுவலர் சங்க நிர்வாகிகள் சாந்தி, காயத்ரி, அருள்இளங்கோ உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட இணைச் செயலாளர் கல்யாணசுந்தரம் ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !