உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒரு போன் போதுமே...

ஒரு போன் போதுமே...

பாதாள சாக்கடை அடைப்புமதுரை மணிநகரம் இஸ்கான் கோயில் எதிரே பாதாள சாக்கடை அடைப்பால் ரோட்டில் கழிவுநீர் பெருக்கெடுத்துச் செல்கிறது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், வாகன ஓட்டிகள் இன்னல்படுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் அடைப்பை விரைந்து சரிசெய்ய வேண்டும்.- ராமகிருஷ்ணன், மணிநகரம்.எரியாத தெருவிளக்குகள்மதுரை 33 வது வார்டு கே.கே.நகர் பூங்கா முதல் சென்ட்ரல் மார்க்கெட் வரை 80 அடி ரோட்டில் உள்ள 42 தெருவிளக்குகள் ஒரு மாதமாக எரியவில்லை. இதனால் இரவில் மார்க்கெட் செல்வோர், அதிகாலை வாக்கிங் செல்வோர் பாதிக்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் தெருவிளக்குகளை உடனே சரிசெய்ய வேண்டும்.- ரமேஷ், கே.கே.நகர்.குண்டும் குழியுமாக ரோடுமதுரை கூடல்புதுார் அருகே சிக்கந்தர் சாவடி - அதலை பிரிவு மெயின் ரோட்டின் பேவர் பிளாக் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. அதில் மழைநீர் தேங்குவதால் பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கின்றனர். அதிகாரிகள் ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- குணசீலன், கூடல்புதுார்.குப்பையை அகற்றுங்கமாநகராட்சி 36 வது வார்டு தாசில்தார் நகர், முகவை தெருவின் கிழக்கு பகுதியில் பிளாஸ்டிக், மாமிச கழிவு போன்ற குப்பையை கொட்டுவதால் நாய், எலிகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இரவில் எலிகளை வேட்டையாட கிளம்பும் பாம்புகள் வீடுகளுக்குள் புகுகின்றன. துாய்மைப் பணியாளர்கள் குப்பையை அகற்ற வேண்டும்.- நாகசுப்பிரமணியன், தாசில்தார் நகர்.பள்ளத்தை மூடுங்கசோழவந்தான் - மன்னாடிமங்கலம் ரோடு ஓரத்தில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பராமரிப்பு பணிக்காக தோண்டிய பள்ளம் சரிவர மூடப்படாமல் உள்ளது. மழை நேரங்களில் டூவீலரில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து காயமடையும் வாய்ப்பு உள்ளது. ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மோகன், மன்னாடிமங்கலம்.தரமான ரோடு வேண்டும்மதுரை ராஜா மில் ரோடு தொழிலாளர் நலச்சங்க பள்ளி முன் மேடு, பள்ளமுமாக உள்ளது. ஆக்கிரமிப்புகளும் உள்ளதால் பள்ளி மாணவர்களை அழைத்து வரும் வாகனங்கள், டூவீலர்கள் சிரமத்திற்குள்ளாகின்றன. மாநகராட்சி அதிகாரிகள் தரமான தார் ரோடு அமைக்க வேண்டும்.- யோகனந்தன், சிம்மக்கல்.ரோட்டை காணோம்அய்யர்பங்களா பகுதியில் இம்மானுவேல் தெரு, திலக் நகரை இணைக்கும் ரோட்டில் உள்ள பேவர் பிளாக் கற்கள் குடிநீர், பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக அகற்றப்பட்டது. பணிகள் முடிந்து பலநாட்களாகியும் ரோடு புதுப்பிக்கப்படவில்லை. சமீபத்திய மழையால் சேறும் சகதியுமாக ரோடு உள்ளது. புதிய ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சுந்தர ராஜன், அய்யர்பங்களா.நிரம்பி வழியும் சாக்கடைகூடல்புதுார் கிருஷ்ணசாமி நகர் முதல் தெருவில் பாதாள சாக்கடை நிரம்பி காலி மனைகளில் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் முதியோர், குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் நிலையுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் அடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- காத்தவராயன், கூடல்புதுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை