ஒரு போன் போதுமே...
வெளிச்சம் கிடைக்குமாமதுரை புதுார் ராமவர்மா நகர் 4, 5, 6வது தெருக்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இரவில் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சமூக விரோத செயல்கள் நடக்க வாய்ப்புள்ளதால் தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அலெக்ஸ், புதுார்ரோட்டில் பள்ளம்மதுரை வடக்கு வெளிவீதி சேதுபதி பள்ளி பஸ் ஸ்டாப் அருகே பெரிய பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. பாதசாரிகள், வாகன ஓட்டிகள் தவறி விழுந்து அசம்பாவிதம் ஏற்படும் முன் மாநகராட்சி அதிகாரிகள் மழைநீரை அகற்றி பள்ளத்தை சரி செய்ய அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பிரேம், சிம்மக்கல்குண்டுகுழி ரோடுமதுரை பொன்மேனி மெயின் ரோட்டில் குடிநீர், பாதாள சாக்கடை பணிகளுக்காக ரோடுகள் தோண்டப்பட்டன. பணிகள் முடிந்தும் புதிய ரோடு அமைக்காததால் குண்டும் குழியுமாக உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து புதிய தார் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- தினேஷ், பொன்மேனிவடிகால் வசதி இல்லைமதுரை அவனியாபுரம் காவேரி தெருவில் மழைநீர் தேங்கி உள்ளதால் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். ரோடு அமைக்க ஜல்லிகள் கொட்டி பல நாட்கள் ஆகியும் தார் ரோடு அமைக்கப்படவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ரங்காஅவனியாபுரம்சமூக சீர்கேடுமதுரை மகால் 3வது தெரு பின்புறம் கார், ஆட்டோ, டூவீலர்கள் நிறுத்தப்படுகின்றன. சமூக விரோதிகள் அப்பகுதியில் மலஜலம் கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து, சமூக விரோத செயல்களை தடுக்க வேண்டும்.- ராமராஜ், தெற்குவாசல்சாக்கடையில் வீடுகள்மதுரை 91 வது வார்டு வில்லாபுரம் மீனாட்சி நகர் 9 வது தெரு, சாக்கடையால் சூழ்ந்து மோசமான நிலையில் உள்ளது. ஆழ்துளை கிணறுகளிலும் சாக்கடை கலப்பதால் நோய் அபாயம் உள்ளது. குழந்தைகள், முதியோர்கள் மூச்சுத் திணறலால் அவதிப்படுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கிருஷ்ணகுமார், வில்லாபுரம்தெருநாய்கள் தொல்லைமதுரை 71 வது வார்டு பொன்மேனி - மாடக்குளம் மெயின் ரோடுகளில் தெரு நாய்கள் வாகன ஓட்டிகளை துரத்திச் செல்வதால் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சுரேஷ், பொன்மேனி