மேலும் செய்திகள்
வக்கீல் சங்க நிர்வாகிகள் தேர்வு
23-Oct-2024
மதுரை: தமிழக சுற்றுலா தலங்களை பிரபலப்படுத்தும் திட்டத்தின் ஒருபகுதியாக மதுரைக்கு சமூகவலைத்தள செயற்பாட்டாளர்கள் சுற்றுலாத்துறை மூலம் வரவழைக்கப்பட்டனர்.சென்னையில் துவங்கிய பயணம் மாமல்லபுரம், தஞ்சாவூர், காரைக்குடி, ராமேஸ்வரம் வழியாக மதுரையில் நிறைவடைந்தது. முதல்நாள் கீழடியை பார்வையிட்ட பின் திருமலை நாயக்கர் மகால், மீனாட்சியம்மன் கோயிலை பார்வையிட்டனர். அடுத்த நாள் அரிட்டாபட்டி பல்லுயிர் தளம், அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு அரீனா, மாத்துார் மாதிரி வேளாண்மை கிராமத்தை பார்வையிட்டனர்.மாத்துார் செட்டிகுளத்தில் நடந்த விழாவில் கோவிந்தராஜ் கலைக்குழு சார்பில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மட்பாண்டங்கள், பனை ஓலைப் பொருட்கள் நேரடியாக தயாரித்துக் காட்டப்பட்டன. கயிறு இழுத்தல், உறியடி போட்டிகள் நடந்தன. விவசாயிகள் மூலம் நிலத்தில் தானியங்கள் விதைப்பு நடந்தது. சுற்றுலா அலுவலர் பாலமுருகன், கிரேஸ் கார்டன் நிறுவனர் அருள் ஜேம்ஸ் எட்வின் தம்பு பங்கேற்றனர்.
23-Oct-2024