உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காவு வாங்க காத்திருக்கும் கல்குவாரி

காவு வாங்க காத்திருக்கும் கல்குவாரி

சோழவந்தான்: சோழவந்தான் அருகே சக்கரப்ப நாயக்கனுாரில் கைவிடப்பட்ட கிரானைட் குவாரி தடுப்பு வேலியின்றி ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. அப்பகுதி ஆறுமுகம் கூறியதாவது: இங்கு 15 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு குத்தகை மூலம் தனியார் நிறுவனத்தின் கிரானைட் குவாரி செயல்பட்டது. 8 ஆண்டுகளுக்கு முன்பு முறைகேடு புகாரால் தடை விதிக்கப்பட்டு தற்போது செயல்படாமல் உள்ளது. தரை மட்டத்திலிருந்து 100 அடி பள்ளமாகவும், கீழே பல அடி ஆழத்திற்கு தண்ணீர் நிரம்பி கிணறு போல உள்ளது. அருகே அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. மாணவர்கள் சிலர் ஆபத்தை உணராமல் விளையாடவும், குளிக்கவும் செய்கின்றனர். மது அருந்தவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் செயல்படுகிறது. சுற்றுவட்டார மக்கள் குவாரியில் தேங்கிய நீரை குளிக்கவும், துவைக்கவும் பயன்படுத்துகின்றனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு குளிக்க சென்ற சிறுமி தண்ணீரில் மூழ்கி பலியானார். இங்கு முறைகேடாக எடுக்கப்பட்ட பாறைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆபத்தை உணராமல் மக்கள் குவாரியை பயன்படுத்துகின்றனர். தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை