மேலும் செய்திகள்
13 ஊராட்சிகளில் நாளை சமூக தணிக்கை கிராம சபை
14-Nov-2024
மதுரை: மதுரை ஊரக வளர்ச்சித்துறையில் சமூக தணிக்கைக் கூட்டம் நேற்று கலெக்டர் சங்கீதா தலைமையில் துவங்கியது. கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, கூடுதல் உதவித்திட்ட அலுவலர் (என்.ஆர்.ஜி.எஸ்.,) கருப்பசாமி, மாவட்ட வளஅலுவலர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களிலும் 420 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் நுாறு நாள் வேலைத்திட்டப் பணிகள் நடக்கின்றன. இத்திட்டப் பணிகளின் செலவினங்கள் தொடர்பாக ஒன்றிய அளவில் தணிக்கை முடிந்தன. அதன் தொடர்ச்சியாக மாவட்ட அளவில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இருந்து பலர் பங்கேற்றனர். உதவி இயக்குனர் (தணிக்கை) ராஜா திட்டச் செலவுகளை தணிக்கை செய்தார். இதில் பி.டி.ஓ.,க்கள், துணை பி.டி.ஓ.,க்கள், ஊராட்சி செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
14-Nov-2024