ஆரி, எம்ப்ராய்டரி இலவச பயிற்சி முகாம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பூங்கா பஸ் நிறுத்தம் தீயணைப்பு நிலைய வளாகத்திலுள்ள ரூட்செட் பயிற்சி நிலையத்தில் ஆரி, எம்ப்ராய்டரி இலவச தொழில் பயிற்சி முகாம் ஜூன் 18ல் துவங்கி 30 நாட்கள் நடக்க உள்ளது. இம்முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள பெண்கள், திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம்.பங்கேற்போருக்கு உணவு, தங்குமிடம், பயிற்சி உபகரணங்கள் இலவசம். விருப்பமுள்ளோர் 96262 46671ல் அல்லது Email ID:mdu.gmail.com, Website:www.rudsettrainning.orgல் அல்லது நேரில் முன்பதிவு செய்யலாம்.பயிற்சிக்கு வருவோர் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஸ்மார்ட் கார்டு ஆகியவற்றின் நகல்கள், 2 பாஸ்போட் சைஸ் போட்டோக்களைக் கொண்டு வர வேண்டும். 100 நாள் வேலை திட்ட அட்டை உள்ள குடும்பத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இயக்குனர் பாலாஜி தெரிவித்தார்.