உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மேலவளவில் திருமாவளவன்

மேலவளவில் திருமாவளவன்

மேலுார்: மேலவளவில் முன்னாள் ஊராட்சித் தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் நினைவாக கட்டப்பட்டுஉள்ள மணி மண்டபத்தில் வி.சி.க., தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்பு அவர் பேசியதாவது: மேலுார் மண்ணில் உருவானதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. இன்று யாராலும் வீழ்த்தமுடியாதுஅளவுக்கு உருவாகியுள்ளது. நம்மை சராசரி கட்சியாக நினைத்து ஆசை காட்டி மாய வலையில் வீழ்த்தப் பார்க்கின்றனர். மேலும் சராசரி அரசியல்வாதியாகவும் மதிப்பிடுகின்றனர். அம்பேத்கர் அரசியலை பேசுவது, நடைமுறைப்படுத்துவது கடினம். மோடியா, லேடியா, மோதி பார்ப்போம் என ஜெயலலிதா கூறிய ஒருவருடன் இன்று பழனிசாமி கொஞ்சி குலாவுகிறார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ