உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேசிய கிரிக்கெட் அணியில் பள்ளி மாணவர்

தேசிய கிரிக்கெட் அணியில் பள்ளி மாணவர்

சோழவந்தான்: சோழவந்தான் அருகே நகரி கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி 8ம் வகுப்பு மாணவர் ஷிவான்ஷ்சிங், 14 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட்டில் தேசிய அணிக்கு தேர்வாகியுள்ளார். இந்திய அரசின் இளைஞர் நலத்துறை அமைச்சகம் கீழ் செயல்படும் 'ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா' நடத்தும் தேசிய பள்ளி விளையாட்டு போட்டிக்கான தேசிய அணியில் தேர்வாகியுள்ளார். மாவட்ட, மாநில போட்டிகளில் அவரது சிறந்த ஆட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பேட்டிங், பவுலிங், பீல்டிங் உள்ளிட்ட ஆட்டத்தின் அனைத்து துறைகளிலும் திறமையை வெளிப்படுத்தி அணியின் முக்கிய வீரராக இடம் பிடித்துள்ளார். அவரை பள்ளித் தலைவர் செந்தில்குமார், முதல்வர் ஷர்மிளா, ஆசிரியர்கள் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை