உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசு மருத்துவக் கல்லுாரியில் சான்றிதழ் படிப்புக்கான சேர்க்கை

அரசு மருத்துவக் கல்லுாரியில் சான்றிதழ் படிப்புக்கான சேர்க்கை

மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் 2025 - 26 க்கான ஓராண்டு சான்றிதழ் படிப்புக்கான நேரடி மாணவர்கள் சேர்க்கை இன்று (அக்.16) முதல் தொடங்குகிறது. இ.சி.ஜி., டிரட் மில் டெக்னீசியன், பம்ப் டெக்னீசியன், எம்ர்ஜென்சி கேர், ரெஸ்பரேட்டரி தெரபி, அனஸ்தீசியா, தியேட்டர் டெக்னீசியன், இ.இ.ஜி. / இ.எம்.ஜி., கோர்ஸ் டெக்னீசியன், மல்டி பர்பஸ் மருத்துவப் பணியாளர் படிப்புக்கு ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். ஆர்த்தோபீடிக், கார்டியாக் கதீட்டரைசேஷன் லேப் டெக்னீசியன் படிப்புக்கு ஆண்கள் மட்டும் அனுமதி. சான்றிதழ் படிப்பில் 124 காலியிடங்கள் உள்ளதால் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இன்று (அக்.16) முதல் நேரடி மாணவர் சேர்க்கை நடக்கிறது. நவ. 14 கடைசிநாள். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், டி.சி., ஜாதி, பிறப்பிடச்சான்று ஒரிஜனல், ஆதார் சான்று நகல், 5 போட்டோக்களுடன் வரவேண்டும். விபரங்களுக்கு 0452 - 253 2535.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி