உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கல்வி சந்தேகங்களுக்கு ஆலோசனை மையம்

கல்வி சந்தேகங்களுக்கு ஆலோசனை மையம்

உசிலம்பட்டி: சீமானுாத்தில் கலெக்டர் சங்கீதா தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. ஆர்.டி.ஓ., சண்முகவடிவேல் வரவேற்றார். டி.ஆர்.ஓ., அன்பழகன், எம்.எல்.ஏ., அய்யப்பன் பங்கேற்றனர். ஒவ்வொரு துறையின் கீழ் வழங்கப்படும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர்.எம்.எல்.ஏ., பேசுகையில், ''58 கிராம கால்வாயில் தண்ணீர் திறப்பதற்கு முறையான அரசாணை பிறப்பிக்கப்படாததால் கடந்தாண்டு வைகை-பெரியாறில் போதுமான தண்ணீர் இருந்தும் நீர்வளத்துறை அதிகாரிகள் திறந்துவிடவில்லை. அதற்கான நிரந்தர அரசாணை வேண்டும். உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சி.டி., எம்.ஆர்.ஐ., ஸ்கேன் வசதி செய்து தரவேண்டும்'' என்றார்.கலெக்டர் பேசுகையில், ''மதுரை மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மாணவர்களின் கல்வி சந்தேகங்களை தெளிவுபடுத்த ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை 72006 47475, 0452 - 252 2995ல் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். அக்.31 வரை வேலைநாட்களில் வேலை நேரங்களில் இம்மையம் செயல்படும்'' என்றார்.தாசில்தார் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி