போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆலோசனை
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பது குறித்து சப்கலெக்டர் உட்கர்ஷ்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி., சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார், தாசில்தார் பாலகிருஷ்ணன், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் சீதாராமன், போக்குவரத்து போலீசார், நகராட்சி கமிஷனர் இளவரசன், வர்த்தக சங்கத்தினர் பங்கேற்றனர். பேரையூர் ரோடு விரிவாக்கப்பணி நடக்க உள்ளதால், கடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நகராட்சி நிர்வாகம் ஒதுக்கும் இடத்தில் 'பார்க்கிங்' செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. வர்த்தக சங்க நிர்வாகிகள் திருமுருகன், ஜவகர், பண்டாரம், முத்து, நடராஜன் பங்கேற்றனர். வர்த்தக சங்கத்தினர் சார்பில் ரோடு விரிவாக்கம் செய்த பின் ரோட்டோரத்தில் வாகனங்களை நிறுத்த கயறு கட்டி கொடுக்க வேண்டும், கடைகளின் மேலே நிழல் பந்தல் அமைக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.