உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உசிலையில் வேளாண் அனுபவ பயிற்சி

உசிலையில் வேளாண் அனுபவ பயிற்சி

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதி கிராமங்களில் தேனி வேளாண் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள் கிராமப்புற வேளாண் அனுபவப் பயிற்சித் திட்டத்தில் களப்பணிகளை மேற்கொண்டுள்ளனர். உத்தப்ப நாயக்கனுாரில் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசின் 'உழவன்செயலி' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. செயலியைப் பயன்படுத்தும் முறை, அரசின் வேளாண் திட்டங்கள், மானிய விவரங்கள், விதைகள், இடுபொருட்கள் முன்பதிவு, வானிலைத் தகவல்கள், பயிர் காப்பீடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து மாணவர்கள் எடுத்துரைத்தனர். வேளாண் துறையில் தற்போதுள்ள நவீன தொழில்நுட்பங்கள், ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு, விளைபொருட்களை மதிப்புக் கூட்டுதல் குறித்தும் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் காட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !