உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வேளாண் மாணவிகள் செயல்முறை விளக்கம்

வேளாண் மாணவிகள் செயல்முறை விளக்கம்

வாடிப்பட்டி: மதுரை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவிகள் கிராமப்புற அனுபவ திட்டத்தின் கீழ் வாடிப்பட்டியில் தங்கி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.குட்லாடம்பட்டியில் மாணவி கிருஷ்ணவேணி நெற்பயிர் விளைச்சலை அதிகரிக்கவும், பூச்சி மற்றும் பூஞ்சானங்களை கட்டுப்படுத்தவும் அசோஸ்பைரில்லம் என்ற உயிர் உரம் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்யும் முறை குறித்து விவசாயிகளுக்கு செயல்முறையில் விளக்கினார். செமினிப்பட்டியில் மாணவி லட்சுமி கணேஷ்வரி டெல்டா பொறி குறித்தும் ஆண் பூச்சிகள் ஈர்க்கப்பட்டு பொறியில் தடவப்பட்டிருக்கும் பசையில் ஒட்டி கட்டுப்படுத்த உதவுவது குறித்து விளக்கினார். குணசேகரன்கோட்டையில் மாணவி கீர்த்தி மண்வள அட்டை குறித்தும், இந்த அட்டை மூலம் மண்வளத்தையும் மண்ணிற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அறிய பயன்படுத்துவது குறித்து விளக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ