மேலும் செய்திகள்
கண்மாய்களை சீரமையுங்க: விவசாயிகள் கோரிக்கை
16-May-2025
சோழவந்தான்: சோழவந்தான் அருகே தென்கரையில் மின் தட்டுப்பாட்டால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் நிலம் காய்ந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.தென்கரை விவசாயி முருகன் தெரிவித்ததாவது: வேகமாக வீசும் காற்றினாலும், தென்னை மட்டைகள் விழுவதாலும் மின் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசுவதால் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுகிறது.தற்போது கண்மாயில் தண்ணீர் இல்லாததால், கிணற்று பாசனத்தை நம்பியுள்ளோம். மின்சாரம் இன்றி தண்ணீர் பாய்ச்ச முடியாமல் நிலங்கள் காய்ந்து பாளம், பாளமாக வெடித்துள்ளன.இதனால் பயிர்கள் கருகும் நிலை ஏற்படுகிறது. சோழவந்தான் மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்த போது ஆட்கள் பற்றாக்குறையால் பணிகள் தாமதமாவதாக கூறுகின்றனர். வேறுவழியின்றி கடனுக்கு தண்ணீரை வாங்கி, நஷ்டத்தை சந்திக்கிறோம். அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.உதவி மின் பொறியாளரிடம் கேட்டபோது, 'விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
16-May-2025