உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வேளாண்மை கருத்தரங்கம்

வேளாண்மை கருத்தரங்கம்

பேரையூர் : டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கான உயிர்ம வேளாண்மை கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடந்தது.உதவி இயக்குனர் விமலா வரவேற்றார். வேளாண் துணை இயக்குனர் அமுதன் பேசுகையில், ''நஞ்சில்லா விவசாயம் மேற்கொண்டு நல்லதொரு ஆரோக்கியமான சமுதாயமாக மாற வேண்டும். இதற்கு விவசாயிகள் பாரம்பரிய மேலாண்மை வளர்ச்சி திட்டத்தில் பெற்ற கொள்கலன், அசோலா படுக்கை, மண்புழு படுக்கையை தொடர்ந்து பயன்படுத்தி ஜீவாமிர்தம், பஞ்சகாவியம், மீன் அமிலம், பூச்சி விரட்டிகள், மண்புழு உரம் இவற்றை உற்பத்தி செய்து பயன்படுத்த வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை