மேலும் செய்திகள்
அ.தி.மு.க., ஆலோசனை
06-Apr-2025
திருப்பரங்குன்றம்: மதுரை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் திருப்பரங்குன்றம் கிழக்கு பகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. பகுதிச் செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார்.மாவட்ட பொறுப்பாளர் காந்தி பேசினார். நிர்வாகிகள் செல்வகுமார், மோகன்தாஸ், பன்னீர்செல்வம், பாலா, பாலமுருகன், முத்துகிருஷ்ணன், நாகரத்தினம் கலந்து கொண்டனர்.* திருப்பரங்குன்றம் வடக்கு பகுதி சார்பில் திருநகரில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பகுதிச் செயலாளர் செல்வகுமார் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட எம்.ஜி. ஆர்., இளைஞர் அணி செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் மகாராஜன், ராஜ்குமார், ஜெயமுருகன் கலந்து கொண்டனர்.
06-Apr-2025