அ.தி.மு.க.,வின் நிலை காங்., எம்.பி., ஆருடம்
திருமங்கலம்: திருமங்கலம் நகராட்சியில் நடந்து வரும் பல்வேறு திட்டங்களை காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது: தங்கம் விலை உயர மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே காரணம். அ.தி.மு.க., தற்போது அமித்ஷா தி.மு.க.,வாக உள்ளது. அழிவின் விளிம்புக்கு அ.தி.மு.க., சென்று கொண்டுள்ளது. பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.,வுக்கு இதுவே கடைசி தேர்தலாக இருக்கும். பிரசார பயணத்தில் மாற்று கட்சியின் 2 கொடிகளை பார்த்த பின்னர் அவர்களும் கூட்டணிக்கு வர உள்ளதாக தெரிவிப்பது மிகவும் நகைப்புக்குரியது. அமைச்சராக 5 ஆண்டுகள், எம்.எல்.ஏ.,வாக பல ஆண்டுகள், திருமங்கலம் பகுதியில் உதயகுமார் இருந்த போதும், வளர்ச்சித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மக்களுக்கு சோப்பு, சீப்பு, டப்பா கொடுத்து ஏமாற்றி வந்துள்ளதை மக்கள் நன்கு அறிவர். வரும் தேர்தலில் அவருக்கு தக்க பாடத்தை புகட்டுவர் என்றார்.