உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டை அமைச்சர் உதயநிதி துவக்கி வைக்கிறார்

அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டை அமைச்சர் உதயநிதி துவக்கி வைக்கிறார்

மதுரை : மதுரை அலங்காநல்லுாரில் ஜன.17 ல் நடக்கும் ஜல்லிக்கட்டை அமைச்சர் உதயநிதி துவக்கி வைக்கிறார் எனஅமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.பாலமேடு, அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் மூர்த்தி கூறியதாவது: உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டியை பாதுகாப்பாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகிறது. அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டை அமைச்சர் உதயநிதிதுவக்கி வைக்கிறார்.சிறந்த காளைகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார், தங்க மோதிரம், தங்கக் காசு, பணம் உள்ளிட்டவைகளை பரிசாக வழங்குகிறார். வெளிநாட்டினர் பார்வையிட உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு, சுகாதாரம், குடிநீர், மருத்துவ வசதிகள் நீதிமன்ற வழிகாட்டுதல்படி மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. அமைச்சர் உதயநிதியை கட்சி சார்பில் தமிழ்க் கலாசாரத்துடன் வரவேற்க தி.மு.க., வடக்கு மாவட்டம் ஏற்பாடுசெய்துள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி